- தென்காசி மாவட்டம்
- Kumbabhishek
- தென்காசி
- சங்கரநாராயண சுவாமி கோயில்
- Sankaranko
- மாவட்டம்
- கும்பாபிஷேகம்
- சங்கரநாராயன் கோயில்
- சங்கரன்கோ
- பூஜை
- கும்பபிஷேக்
- தின மலர்
தென்காசி: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி தென்காசி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சங்கரன்கோவில் சங்கர நாராயணன் கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. முன்னதாக கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 16ம் தேதி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று மாலையுடன் 4ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்த நிலையில், சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று காலை 9 மணியிலிருந்து 9.45 மணி வரை நடைபெறுகிறது.
இதற்காக கோயில் உட்பிரகாரத்தில் 66 குண்டங்கள் கொண்ட யாகசாலை அமைக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டு வந்தன. அதிகாலை முதலே பூஜைகள் செய்யப்பட்டு வரும் நிலையில், காலை 8 மணிக்கு கலசங்கள் புறப்பாடும், 9 மணிக்கு கோமதி அம்பிகா சமேத சங்கரலிங்க சுவாமி, சங்கர நாராயணசாமி விமானம் மற்றும் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து 9.45 மணிக்கு கோமத் அம்பிகா சமேத சங்கரலிங்க சுவாமி மற்றும் சங்கரநாராயண சாமி மூலஸ்தான மகா கும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெறுகிறது.
இந்நிலையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதால், தென்காசி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். அத்துடன் கும்பாபிஷேகத்தைக் காண லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதாலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
The post கும்பாபிஷேகத்தை ஒட்டி தென்காசி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! appeared first on Dinakaran.