- பாகிஸ்தான் இராணுவம்
- லாகூர்
- பாகிஸ்தான் தெஹ்ரீக்
- -இன்ஸாஃப்
- இம்ரான் கான்
- பாக்கிஸ்தான்
- ஒரியா மக்பூல் ஜன
- யூடியூபர்
- தின மலர்
லாகூர்: பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது கைதுக்கு பிறகு பாகிஸ்தானில் உள்ள ஊடகவியலாளர்கள், பத்திரிகையாளர்கள் கைது போன்ற தொடர் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். ஒரியா மக்பூல் ஜான் என்பவர் பிரபலமான கவிஞர், கட்டுரையாளர், நாடக ஆசிரியர் என பன்முக ஆளுமையடன் திகழ்பவர்.
முன்னாள் அரசு ஊழியரான இவரது யூடியூப் சேனலை ஏராமானோர் பின்தொடர்கின்றனர். இவர் பாகிஸ்தான் அரசியல் செயல்பாடுகளில் ராணுவத்தின் பங்கு குறித்து வௌிப்படையாக பல்வேறு கருத்துகளை வௌியிட்டு வந்தார். இந்நிலையில் மத வெறுப்பை தூண்டுதல், முக்கிய நிறுவனங்களுக்கு எதிராக தவறான செய்திகளை பரப்புதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் ஒரியா மக்பூல் ஜானை பாகிஸ்தான் போலீசார் நேற்று கைது செய்தனர்.
The post பாகிஸ்தான் ராணுவத்தை விமர்சித்த யூடியூபர் கைது appeared first on Dinakaran.