- அல்டிமேட் டேபிள் டென்னிஸ்
- சென்னை
- நேரு அரண்மனை
- அகமதாபாத் SG பைபர்ஸ்
- சென்னை லயன்ஸ்
- தபாங் தில்லி
- கோவா சேலஞ்சர்ஸ்
- ஜெய்ப்பூர் தேசபக்தர்கள்
- பெங்களூரு
- தின மலர்
சென்னை: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரின் 6வது சீசன் சென்னையில் இன்று தொடங்குகிறது. நேரு உள்ளரங்கில் செப். 7 வரை நடைபெற உள்ள இந்த தொடரில் அகமதாபாத் எஸ்.ஜி.பைப்பர்ஸ், சென்னை லயன்ஸ், தபாங் டெல்லி, கோவா சேலஞ்சர்ஸ், ஜெய்பூர் பேட்ரியாட்ஸ், பெங்களூரு ஸ்மேஷர்ஸ், புனேரி பல்தான் டிடி, யு மும்பா டிடி என மொத்தம் 8 அணிகள் இரு பிரிவுகளாக லீக் சுற்றில் களமிறங்குகின்றன. இந்த சீசனில் அகமதாபாத், ஜெய்பூர் அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு போட்டியிலும் 2 ஆண்கள் ஒற்றையர் ஆட்டங்கள், 2 மகளிர் ஒற்றையர் ஆட்டங்கள் மற்றும் 1 கலப்பு இரட்டையர் ஆட்டம் என மொத்தம் 5 ஆட்டங்கள் நடத்தப்படும். இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அரையிறுதி ஆட்டங்கள் செப். 5, 6 தேதிகளில் நடக்க உள்ளன. சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி செப்.7ல் நடைபெற உள்ளது. இது வரை நடந்துள்ள தொடர்களில் எந்த அணியும் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றதில்லை. கடந்த சீசனில் நட்சத்திர வீரர் அசந்தா சரத் கமல் தலைமையிலான சென்னை லயன்ஸ் அந்த வாய்ப்பை நூலிழையில் நழுவவிட்டது. பைனலில் கோவா சேலஞ்சர்சுடன் மோதிய லயன்ஸ் 7-8 என்ற கணக்கில் போராடி தோற்றது.
அணிகள் விவரம்
* அகமதாபாத் எஸ்ஜி பைப்பர்ஸ்: மனுஷ் ஷா, பெர்னாடெட் ஸாக்ஸ் (ருமேனியா), லிலியன் பார்டெட் (பிரான்ஸ்), ரீத் ரிஷ்யா, பிரீத்தா வர்த்திகார், ஜாஷ் மோடி.
* சென்னை லயன்ஸ்: அசந்தா சரத் கமல், சகுரா மோரி (ஜப்பான்), ஜூல் ரோலண்ட் (பிரான்ஸ்), பாய்மன்டீ பைஸ்யா, மவுமா தாஸ், அபினந்த்.
* தபாங் டெல்லி டிடிசி: சத்தியன் ஞானசேகரன், ஒராவன் பரானங் (தாய்லாந்து), தியா சிதாலே, ஆண்ட்ரியாஸ் லெவன்கோ (ஆஸ்திரியா), யஷான்ஷ் மாலிக், லக்ஷிதா நரங்.
* கோவா சேலஞ்சர்ஸ்: ஹர்மீத் தேசாய், யாங்ஸி லியு (ஆஸ்திரேலியா), யாஷஸ்வினி கோர்பாடே, சுதான்ஷு குரோவர், சாயாலி வாணி, மிஹாய் போபோசியா (இத்தாலி).
* ஜெய்பூர் பேட்ரியாட்ஸ்: நித்யஸ்ரீ மணி, சோ சியூங்மின் (தென் கொரியா), சுதாசினி சவெட்டாபட் (தாய்லாந்து), ஸ்நேகித் எஸ்எப்ஆர், ரோனித் பஞ்ஜா, மவுமிதா தத்தா.
* பிபிஜி பெங்களூரு டிடி: மனிகா பத்ரா, அல்வரோ ராபிள்ஸ் (ஸ்பெயின்), லிலி ஸாங் (அமெரிக்கா), ஜீத் சந்திரா, தனீஷா கோடேச்சா, அமல்ராஜ் அந்தோனி.
* புனேரி பல்தான் டிடி: ஆயிகா முகர்ஜீ, ஜோவோ மான்டீரோ (போர்ச்சுகல்), அங்குர் பட்டாச்சார்ஜீ, அனிர்பான் கோஷ், யாஷினி சிவசங்கர், நதாலியா பஜோர் (போலந்து).
* யு மும்பா டிடி: மானவ் தக்கார், சுதிர்தா முகர்ஜீ, அருணா குவாத்ரி (நைஜீரியா), ஆகாஷ் பால், காவ்ய பாஸ்கர், மரியா ஜியாவோ (ஸ்பெயின்).
The post அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சென்னையில் இன்று தொடக்கம் appeared first on Dinakaran.