- அஇஅதிமுக
- வேலூர்
- பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க
- தாமரைப்பாக்கம், ஆற்காடு தாலுக்கா, ராணிப்பேட்டை மாவட்டம்
- தின மலர்
வேலூர்: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா தாமரைபாக்கத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் அந்த கிராமத்தை சுற்றியுள்ள விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இங்கு பெருமளவு நிதி முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இந்நிலையில் கடந்த 1-4-2019 முதல் 31-3-2021 வரை சங்கத்தின் செயல்பாடுகள், துணை நிதி, சட்ட விதிகள், ஆணையரின் சுற்றறிக்கைபடி சங்கம் செயல்படுகிறதா என விசாரணை நடத்த கூட்டுறவு சங்க உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் அக்காலக்கட்டத்தில் கூட்டுறவு சங்க தலைவராக இருந்த அதிமுகவை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரும், செயலாளர் செல்வரசும் சேர்ந்து சங்கத்தின் வங்கி கணக்கில் இருந்து ரூ.46 லட்சத்து 31 ஆயிரத்து 559ஐ முறைகேடு செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் வேலூர் வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து செயலாளர் செல்வரசுவை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். கிருஷ்ணனை தேடி வருகின்றனர்.
The post ரூ.46.31 லட்சம் முறைகேடு கூட்டுறவு செயலாளர் கைது: அதிமுக நிர்வாகிக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.