ராமேஸ்வரம்: பாம்பனில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்குப் பாலத்தில், முதல் முறையாக 11 பெட்டிகளை கொண்ட சரக்கு ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது. பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் 2.1 கி.மீ.ல் புதிய ரயில் பாலம் கட்டும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதில், 1.6 கி.மீ. தூரத்திற்கான பாலம் பணி முடிந்த நிலையில், சில நாட்களுக்கு முன் ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், மீதமுள்ள 500 மீட்டர் தூரத்திற்கான பாலத்தின் நுழைவில் தூக்குப் பாலம் இணைக்கும் பணி நடைபெற்று முடிந்துள்ளது. தண்டவாளம் அமைக்கும் பணியும் நிறைவடைந்ததை அடுத்து ரயில் இஞ்சின் சோதனை ஓட்டம் நடைபெற்று முடிந்துள்ளது.
இதையடுத்து ஊழியர்கள் அடுத்தடுத்த பணிகளில் துரிதமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று 11 பெட்டிகள் கொண்ட ரயில் இயக்கப்பட்டது. முதற்கட்டமாக மண்டபம் பகுதியிலிருந்து பாம்பன் தூக்குப்பாலத்திலும், ரயில் பாலத்திலும் இயக்கப்பட்டது.
பாலத்தில் ஏதேனும் அதிர்வுகள் உள்ளதா என்பது குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. பாலத்தின் மீது இயக்கப்பட்ட ரயிலின் வேகம் 20 லிருந்து 60கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post புதிய பாம்பன் பாலத்தில் கொட்டும் மழைக்கு நடுவே நடந்த சோதனை ஓட்டம்! appeared first on Dinakaran.