- ஆர். எஸ். இந்தியா
- ஐரோப்பிய ஒன்றிய பஹியா அரச
- Waiko
- சென்னை
- அரசாங்க நிர்வாகம்
- ஆர். எஸ். வைகோ
- இந்தியா
- ஐயூ பாஜா அரசு
- பொது
- விகோ
- யூனியன் அரசு
- மோடி
- அரசு. ஆர். எஸ். இந்தியா
- தின மலர்
சென்னை: அரசு நிர்வாகத்தை ஆர்.எஸ்.எஸ். மயமாக்க முயற்சிக்கும், ஒன்றிய பாஜ அரசின் சதி திட்டத்தை இந்தியா கூட்டணி முறியடிக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசு, தனியார் நிறுவன உயர் அலுவலர்களை, அரசின் செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளாக நியமனம் செய்யும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. புதிதாக மேலும் 45 பேரை நியமிக்க ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அண்மையில் விளம்பரம் வெளியிட்டுள்ளது.
இந்த திட்டம் அப்பட்டமான சட்ட மீறல் மட்டும் அல்ல, அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீது நடத்தப்படும் கொடும் தாக்குதல். இதன் மூலம் அரசு நிர்வாகம் முழுமையாக ஆர்.எஸ்.ஸ். பிடியின் கீழ் செல்லும் வகையில் பாதை அமைக்கும் சதித்திட்டம் அரங்கேற்றப்பட்டு வருவது கடும் கண்டனத்திற்கு உரியது. இந்த செயல் யு.பிஎஸ்.சி தேர்வுக்கு தயாராகும் திறமையான இளைஞர்களின் உரிமைகளைப் பறிக்கும் செயலாகும். இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் இணைந்து போராடி அரசு நிர்வாகத்தை ஆர்.எஸ்.எஸ். மயமாக்கும் ஒன்றிய பாஜ அரசின் சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும்.
The post அரசு நிர்வாகத்தை ஆர்.எஸ்.எஸ் மயமாக்க முயற்சி ஒன்றிய பாஜ அரசின் சதி திட்டத்தை இந்தியா கூட்டணி முறியடிக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல் appeared first on Dinakaran.