×
Saravana Stores

மாற்றாந்தாய் மனப்பான்மையோடு செயல்படும் ஒன்றிய அரசு: துரை வைகோ தாக்கு

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் இன்று காலை மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்பி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவிற்கு முன் உதாரணமாக இருந்து வருகிறது. ஆனால் ஒன்றிய அரசு தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்க மறுப்பதால் தமிழகத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத சூழல் உள்ளது. ஒன்றிய அமைச்சரிடம் கோரிக்கை வைத்தால் தேசிய கல்விக்கொள்கையில் இணைந்தால் மட்டுமே நிதி அளிக்கப்படும் என்கிறார்.

இதனால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு அரசு உதவி பெறும் பள்ளிகளும் கூட கடுமையாக பாதிக்கப்படுகிறது. மாற்றாந் தாய் மனப்பான்மையோடு ஒன்றிய அரசு செயல்படுகிறது. கல்வியில் எக்காரணம் கொண்டும் அரசியல் இருக்கக் கூடாது. தமிழகத்தில் ஒருபோதும் திமுக தலைமையிலான கூட்டணி மாறாது. அண்ணாமலை அவருடைய அரசியல் அறிவை வளர்க்க வெளிநாடு சென்றுள்ளார். இவ்வாறு துரை வைகோ எம்பி கூறினார்.

The post மாற்றாந்தாய் மனப்பான்மையோடு செயல்படும் ஒன்றிய அரசு: துரை வைகோ தாக்கு appeared first on Dinakaran.

Tags : Union ,Turai Wiko Taka ,Kanyakumari ,Prime Secretary ,Duri Waiko ,Tamil School Department ,India ,Union Government ,Tamil School Education Department ,Mutual Union Government ,Durai Wiko Thaku ,
× RELATED இந்து மற்றும் முஸ்லிம் அறக்கட்டளைபோல...