×
Saravana Stores

தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 26 பேர் குண்டாசில் கைது: கமிஷனர் அருண் நடவடிக்கை

சென்னை: சென்னையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகள் உட்பட 26 பேரை, போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். சென்னை பெருநகர காவல்துறையில் கொலை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வரும் நபர்களை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 12ம் ேததி முதல் 18ம் தேதி வரை கொலை ரவுடிகள் உட்பட 26 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, ஜெ.ஜெ.நகரில் வழிப்பறியில் ஈடுபட்ட பெரம்பூர் ரமணா நகரை சேர்ந்த யோகேஷ் (25), எம்.கே.பி.நகரில் வழிப்பறியில் ஈடுபட்ட நீலாங்கரையை சேர்ந்த சுரேஷ் (34), பாலியல் வழக்கில் தொடர்புடைய மயிலாப்பூரை சேர்ந்த தினேஷ்குமார் (எ) அப்பு (24), பழவந்தாங்கல் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட பழைய பல்லாவரத்தை சேர்ந்த கண்ணன் (எ) கமலக்கண்ணன் (35), ஆன்லைன் மூலம் பணம் மோசடியில் ஈடுபட்ட திருவொற்றியூரை சேர்ந்த சதீஷ்குமார் (33), சதீஷ் (26), வில்லிவாக்கம் பகுதியில் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைதான மஞ்சுநாதா (24), திருமங்கலத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்த ஹரி (எ) ஹரிகரன் (22), பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைதான வில்லிவாக்கத்தை சேர்ந்த சந்துரு (எ) அப்பு (21), நீலாங்கரையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட திருவான்மியூரை சேர்ந்த அஜய் (22), கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நெற்குன்றத்தை சேர்ந்த சுப்பிரமணி (48), பழவந்தாங்கல் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட ஆதம்பாக்கத்தை சேர்ந்த விமல்ராஜ் (28), வேளச்சேரியில் கஞ்சா விற்பனை செய்த பாரதி நகரை சேர்ந்த சூர்யா (25), வேளச்சேரியை சேர்ந்த உதயகுமார் (27), துரைப்பாக்கம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட பெருங்குடியை சேர்ந்த கோட்டீஸ்வரன் (எ) கோட்டி (36), அமைந்தகரையில் வழிப்பறியில் ஈடுபட்ட பொழிச்சலூரை சேர்ந்த ரஞ்சித் (29), எர்ணாவூரை சேர்ந்த வினோத் (27), வளசரவாக்கத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட போரூரை சேர்ந்த ராஜ்பாத் (எ) ராஜ் (27), திருமங்கலத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட கார்த்திகேயன் (22), திருவல்லிக்கேணியில் கஞ்சா விற்பனை செய்ததாக பல்லவன் சாலையை சேர்ந்த ஜோபாய் (எ) ஜோசப் (47), வழிப்பறியில் ஈடுபட்ட புரசைவாக்கத்தை சேர்ந்த வசந்தகுமார் (24), அயனாவரத்தில் ஆட்டோவை பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கில் அம்பத்தூர் எஸ்டேட் பகுதியை சேர்ந்த சிவா (21), தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருவொற்றியூரை சேர்ந்த கார்த்திக் (25), செங்குன்றத்தை சேர்ந்த ஜோசப் (எ) தினேஷ் (25), எண்ணூரை சேர்ந்த அப்துல் கரீம் (25) என மொத்தம் 26 குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டார். அதன்பேரில், 26 பேரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 26 பேர் குண்டாசில் கைது: கமிஷனர் அருண் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Commissioner Arun ,Chennai Metropolitan Police ,Guntazil ,Dinakaran ,
× RELATED பொதுமக்கள் குறை தீர் முகாமில்...