×

சென்னையில் வீட்டு வேலை பார்த்து வந்த சிறுமி துன்புறுத்தி கொலை?: தம்பதியிடம் விசாரணை

சென்னை: சென்னை அமைந்தகரையில் வீட்டு வேலை பார்த்து வந்த சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் தம்பதியிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். முகமது நவாஸ் என்பவரது வீட்டில் வேலை பார்த்து வந்த சிறுமி, கழிவறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். முகமது நவாஸ் வீட்டில் வேலை பார்த்து வந்த 16 வயது சிறுமி துன்புறுத்தப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. சிறுமியின் சடலத்தைக் கைப்பற்றி முகமது நவாஸ் – நிவேதிதா தம்பதியிடம் அமைந்தகரை போலீஸ் விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனைக்குப் பின்னரே முழுமையான விவரம் தெரிய வரும் என்று போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் வீட்டு வேலை பார்த்து வந்த சிறுமி துன்புறுத்தி கொலை?: தம்பதியிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mohammed Nawaz ,Mohammad Nawaz ,
× RELATED ஃபெஞ்சல் புயல், கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்