×
Saravana Stores

கவுரவம் காத்த கேப்டன் ஹர்மன்: ஆட்டத்துக்கு ஆட்டம் கோல்!

ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பதக்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட விளையாட்டுகளில் ஹாக்கியும் ஒன்று. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து நிறைவேற்றியும் காட்டியிருக்கிறது இந்திய ஹாக்கி அணி. அதற்கு முக்கிய காரணம் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் (28). இந்திய அணியை வெற்றிகரமாக வழிநடத்தியதுடன், நெருக்கடியான தருணங்களிலும் பதற்றமின்றி செயல்பட்டதுடன் கோல் மழை பொழிந்து அசதியிருக்கிறார். இந்தியா விளையாடிய ஒவ்வொரு ஆட்டத்திலும் ஹர்மனின் கோல் பங்களிப்பு இருந்திருக்கிறது. பெல்ஜியத்துக்கு எதிரான ஒரு லீக் ஆட்டம் மட்டுமே விதி விலக்கு.

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா அடித்த 15 கோல்களில் 10 கோல்கள் ஹர்மன்பிரீத் அடித்தவை. அபிஷேக் 2, விவேக் சாகர், சுக்ஜித் சிங், மன்தீப் சிங் தலா ஒரு கோல் அடித்தனர். அதுமட்டுமல்ல, அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் ஹர்மன்பிரீத் முதலிடத்தை பிடத்துள்ளார். அவர் 8 ஆட்டங்களில் விளையாடி 10 கோல்கள் அடிக்க, 2வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய வீரர் பிளாக் கோவர்ஸ் 7 (6 ஆட்டங்கள்) கோல்கள் போட்டுள்ளார். ஜெர்மனி வீரர் கிறிஸ்டோபர் ருஹர் (5 கோல்) 3வது இடத்தை பிடித்திருக்கிறார்.

The post கவுரவம் காத்த கேப்டன் ஹர்மன்: ஆட்டத்துக்கு ஆட்டம் கோல்! appeared first on Dinakaran.

Tags : Harman ,India ,Olympics ,Harmanpreet Singh ,Dinakaran ,
× RELATED 2036ல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்தது இந்தியா!