- கோயம்புத்தூர்
- சிவகுமாரின்
- விநாயக் நகர்
- கஸ்தூரி நாயக்கன்பாளையம், கோவை
- அலெக்ஸ் ஸ்டீபன்
- விழுப்புரம்
- நவீன்
- வாணியம்பாடி ஆரோக்கியராஜ்
- சௌரிபாளையம்
கோவை, ஆக. 8: கோவை கஸ்தூரி நாயக்கன்பாளையம் விநாயகர் நகர் பகுதியில் சேர்ந்தவர் சிவகுமார் (35). இவர் இன்டீரியர் வேலை செய்து வருகிறார். இவரது நிறுவனத்தில் சௌரிபாளையம் பகுதியை சேர்ந்த அலெக்ஸ் ஸ்டீபன் (27), விழுப்புரம் நவீன் (20), வாணியம்பாடி ஆரோக்கியராஜ் (18) ஆகியோர் ஊழியர்களாக வேலை செய்து வந்தனர். சம்பவத்தன்று சிவக்குமார் வெளியில் சென்று விட்டு மீண்டும் கடைக்கு வந்தபோது கடையில் இருந்த பல்வேறு பொருட்கள் மாயமாகி இருந்தது.
வேலை செய்த ஊழியர்களையும் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த சிவகுமார் ஊழியர்களின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேச முயன்றார். ஆனால், அவர்கள் போனை எடுக்கவில்லை. அதன் பிறகு தான் அவர்கள் கட்டிங் மெசின், டிரில்லர், சுத்தியல் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து சிவகுமார் வடவள்ளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து ஊழியர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.
The post நிறுவனத்தில் திருடிய 3 ஊழியர்கள் கைது appeared first on Dinakaran.