×

வடகிழக்கு பருவமழைக்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்: டிடிவி தினகரன்

சென்னை: சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்துவரும் தொடர்மழை – வடகிழக்கு பருவமழைக்கு முன்பாகவே 100 சதவிகிதம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழை பெய்துவரும் நிலையில் அடுத்த சில நாட்களுக்கும் இந்த மழை நீடிக்கும் என வானிலை ஆய்வும் மையம் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னை மாநகரில் ஒரே நேரத்தில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில், சாலை மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்காக அங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் இருப்பதால், அதில் தேங்கி நிற்கும் மழைநீர் வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.

எனவே, வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

The post வடகிழக்கு பருவமழைக்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்: டிடிவி தினகரன் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,TTV ,Dhinakaran ,CHENNAI ,Tamil Nadu ,AAMUK ,General Secretary ,TTV Dhinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் காற்றாலை மின்உற்பத்தி...