- கர்நாடக
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திருச்சி
- காவிரி ஒழுங்குமுறைக் குழு
- காவிரி
- சேலம் மாவட்டம்
- மேட்டூர்
- தின மலர்
திருச்சி, ஆக.1: கர்நாடக மாநிலம் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைப்படி வரும் மாதங்களில் நிலுவையின்றி பெற்றுத்துருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து காவிரியில் பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் நடந்த அனைத்து விவசாய சங்கங்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் டெல்டா மாவட்ட பயிர் சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தொிவிக்கப்பட்டது.
ஆலோசனை கூட்டத்தில் விவசாய சங்கங்களின் சார்பில் பாிந்துரை செய்யப்பட்டதாவன: சம்பா நெல் சாகுபடி செய்யவுள்ள விவசாயிகள் வேளாண்மைத்துறை பாிந்துரை செய்துள்ள பருவகாலத்தில் மட்டுமே சம்பா நெல் சாகுபடி பணிகளை துவங்க வேண்டும்.
கிளை வாய்க்கால்களில் தூர்வாரும் பணியை துரிதப்படுத்தி திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து முறைசார் ஏரி மற்றும் குளங்களிலும் சாகுபடிக்காக தண்ணீரை சேமிக்க வேண்டும். தற்சமயம் திருச்சி மாவட்டத்தில் குறுவை நெல் மற்றும் வாழை சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் முன்னுரிமை அளித்து வாய்க்கால்களில் தண்ணீர் வழங்க வேண்டும். கர்நாடக மாநிலம் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைப்படி வரும் மாதங்களில் நிலுவையின்றி பெற்று வழங்க வேண்டும். நகரப்பகுதிகளை கடந்து செல்லும் வாய்க்கால்களிலுள்ள அதிகளவிலான பிளாஸ் டிக்கழிவுகள், குப்பைகள் மற்றும் ஆகாயத் தாமரைகளை போர்க்கால அடிப்படையில் அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைமடை பகுதிகள் வரை வாய்க்கால்களில் தண்ணீர் சென்று சேர்வதை உறுதிப்படுத்த வேண்டும் என ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்தார்.
The post கர்நாடகா தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை நிலுவையின்றி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.