×

தொட்டியம் அருகே தனியார் பள்ளி விடுதியில் சிறுமி தூக்கிட்டு தற்கொலை

முசிறி, நவ.10: திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே திருஈங்கோய்மலை பகுதியில் தனியார் பள்ளி குழந்தைகள் காப்பக இல்லத்தில் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் தெற்கு சித்தாம்பூரை சேர்ந்த முருசாமி மகள் ஹரிணி (15). இவரது சகோதரி திவ்யா(16). இருவரும் தொட்டியம் அருகே திருஈங்கோய்மலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் குழந்தைகள் நல காப்பகத்தில் தங்கி பயின்று வந்தனர்.

இந்நிலையில் சனிக்கிழமை பள்ளிக்கு சென்று விடுதிக்கு வந்த ஹரிணி உடைகளை மாற்றுவதற்காக விடுதியின் அறைக்குள் சென்றவர் வெகு நேரமாகியும் வரவில்லை. இதனால் அவரது சகோதரி திவ்யா உடை மாற்றும் அறைக்கு சென்று பார்த்தார். அப்போது ஹரினி விடுதியில் உள்ள மேற்கூரை கம்பியில் துப்பட்டாவில் தூக்கிலிட்ட நிலையில் இருந்ததை பார்த்து கூச்சலிட்டார்.

இதையடுத்து விடுதியில் உள்ள மாணவிகள் பார்த்து விடுதி காப்பாளர்ளிடம் தெரிவித்தனர். விடுதி காப்பாளர் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இத்தகவலறிந்த தொட்டியம் போலீசார் சிறுமியின் சடலத்தை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தொட்டியம் அருகே தனியார் பள்ளி விடுதியில் சிறுமி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Thaniyam ,Musiri ,Tiruingoimalai ,Trichy district ,Murusamy ,Harini ,South Chithampur, Trichy District, Mannachanallur Circle ,
× RELATED திருச்சி பூம்புகார் விற்பனை...