×

போக்குவரத்துக் கழகம் கணித்து இயக்க வசதியளிக்கும்: அரசு போக்குவரத்துக்கழக குடந்தை கோட்டம் தகவல்

திருச்சி, நவ.8: சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு இயக்கப்படும் சிறப்பு பஸ்களில், பயணிகள் முன்பதிவு செய்து பயணிப்பது பயணிகளின் சிரமத்தை குறைப்பதுடன், தேவைக்கு ஏற்ப போக்குவரத்துக்கழகம் கூடுதல் பஸ்களை இயக்க வசதியாக இருக்கும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (கும்பகோணம்)லிட் நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (கும்பகோணம்)லிட்., சார்பில் சனி, ஞாயிறு வார விடுமுறையை முன்னிட்டும், சொந்த ஊர் செல்லும் பொது மக்கள் வசதியை கருத்தில் கொண்டும், சென்னையில் இருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கும், திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கும், விடுமுறை தினமான இரண்டு நாட்களுக்கு கூடுதலாக 243 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

அதே போன்று திருச்சியில் இருந்து கோவை, திருப்பூர், மதுரை காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கும், அங்கிருந்து திருச்சி வருவதற்கு 150 பஸ்களும் என விடுமுறை தினமான இன்றும் (நவ.8), நாளையும் (நவ.9) சேர்த்து மொத்தம் 393 சிறப்பு பஸ்கள் இயக்குகிறது. அதே போன்று விடுமுறைக்கு சொந்த ஊர் சென்ற பயணிகள் மீண்டும் அவரவர் பணியிடங்களுக்கு திரும்ப செல்ல வதியாக நவ.10, 11 (ஞாயிறு மற்றும் திங்கள்) ஆகிய தினங்களில் சென்னை தடத்தில் 150 சிறப்பு பஸ்களும், பிறத்தடங்களில் 75 சிறப்பு பஸ்களும் இயக்க விரிவாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்வதால் போக்குவரத்துக்கழகம் பயணிகளின் எண்ணிக்கை குறித்து கணித்து கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும். அதோடு முன்பதிவு செய்வதால் பயணிகள் எவ்வித சிரமமுமின்றி பயணிக்கலாம். அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் முக்கிய நகரங்களுக்கிடையே இயக்கப்படும் பஸ்களுக்கும் முன்பதிவு சேவை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் www.tnstc.in இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(கும்பகோணம்)லிட்., நிர்வாக இயக்குநர் பொன்முடி பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The post போக்குவரத்துக் கழகம் கணித்து இயக்க வசதியளிக்கும்: அரசு போக்குவரத்துக்கழக குடந்தை கோட்டம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Transport Corporation ,Govt Transport Corporation ,Kotam ,Trichy ,Tamil ,Nadu ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியதாரர்கள் மார்ச் 15க்குள்...