×

கூட்டுறவுத்துறை ஊழியருக்கு கொலை மிரட்டல் அரசு பணியாளர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

 

திருச்சி, நவ.6: அமராவதி கூட்டுறவுத்துறை விற்பனையாளருக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டலை கண்டித்து தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்சி அமராவதி கூட்டுறவுத்துறையில் விற்பனையாளராக பணியாற்றுபவர் பாத்திமா. இவருக்கு கொலை மிரட்டல் விடுத்தும், உள்நோக்கத்துடன இவர் மகன் மீது கஞ்சா வழக்கும் பதியப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதை கண்டித்து தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாநில தலைவர் சுமதி தலைமை வகித்தார். சிறப்புத்தலைவர் பாலசுப்ரமணியம் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், ஊழியரின் மகன் மீது பதிந்த பொய் வழக்கை திரும்பப் பெறவும் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

 

The post கூட்டுறவுத்துறை ஊழியருக்கு கொலை மிரட்டல் அரசு பணியாளர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Public Employees Association ,Trichy ,Collector ,Office ,Tamil Nadu Civil Servants Association ,Amravati Co-operative Department ,Fatima ,Amravati ,Government Employees Association ,Dinakaran ,
× RELATED தோட்டக்கலை பயிர் சாகுபடியாளர்கள்...