×

2026 சட்டமன்ற தேர்தல் குறித்து மணப்பாறை திமுக பாக முகவர்கள் ஆலோசனை

 

மணப்பாறை, நவ.6: திருச்சி மாவட்டம், மணப்பாறை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி வரவேற்றார். கூட்டத்தில் மாநில விவசாய தொழிலாளர் அணி துணைத் தலைவரும் ரங்கம் தொகுதி பார்வையாளர் சந்திரசேகரன், ரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, ஆகியோர் ஆலோசனை வழங்கி பேசினர். கூட்டத்தில் வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் பணியை சிறப்பாக மேற்கொள்வது. லோக்சாபா தேர்தலில் 40க்கு 40 ஐ வென்றது போல் வரவுள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெல்வதை குறிக்கோளாகக்கொண்டு பணியாற்ற வேண்டும் என உறுதியேற்கப்பட்டது. இதில் பாகமுகவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

The post 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து மணப்பாறை திமுக பாக முகவர்கள் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Manaparai DMK party ,2026 assembly elections ,Manaparai ,Manaparai East Union DMK ,Trichy district ,Eastern Union ,Arogyasamy ,Trichy East District ,Vairamani ,2026 Assembly Election ,Manparai DMK Party ,Dinakaran ,
× RELATED 2026 சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜயுடன் கூட்டணியா? ஓபிஎஸ் பேட்டி