×

அந்தநல்லூர் ஒன்றிய திமுக பாக முகவர்கள் கூட்டம்

 

ஜீயபுரம், நவ.6: அந்தநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திமுக பாக முகவர்கள் கூட்டம் ஜீயபுரத்தில் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் நேரு வழிகாட்டுதலின் பேரில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் மாயகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் கதிர்வேல் முன்னிலை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் டாக்டர் கண்ணன் வரவேற்றார். மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, ரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி, ஒன்றிய குழு தலைவர் துரைராஜ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். ரங்கம் தொகுதி பாக முகவர்களுக்கான பொறுப்பாளர் புதுக்கோட்டை சந்திரசேகர் கலந்து கொண்டு ஆலோசனைகள், கருத்துரைகளை வழங்கி பேசினார். அந்தநல்லூர் ஒன்றிய பகுதி பாக முகவர்கள், சிறுகமணி பேரூர் கழக பாக முகவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post அந்தநல்லூர் ஒன்றிய திமுக பாக முகவர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Andhanallur union DMK ,Jiyapuram ,DMK ,Andanallur union ,Municipal ,Administration ,Water Supply ,Minister ,Nehru ,Union Speaker ,Mayakrishnan ,Union… ,Dinakaran ,
× RELATED ஜீயபுரம் போலீசில் சீமான் மீது புகார்