×

நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்: பாஜ மற்றும் மஜத வெளிநடப்பு

பெங்களூரு: நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர கடந்த 22ம் தேதி முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழ்நாடு சட்டபேரவையில் கொண்டுவந்து நிறைவேற்றியது போல், நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும்,

இரண்டாமாண்டு பியூசி தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்ற கருத்தை கர்நாடக சட்டபேரவையில் நேற்று தீர்மானமாக முதல்வர் சித்தராமையா கொண்டு வந்து தாக்கல் செய்தார். சித்தராமையா தாக்கல் செய்த தீர்மானம் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் இருந்து பாரதிய ஜனதா மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

The post நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்: பாஜ மற்றும் மஜத வெளிநடப்பு appeared first on Dinakaran.

Tags : Karnataka ,assembly ,BJP ,JD ,Bengaluru ,Karnataka Assembly ,Chief Minister ,Siddaramaiah ,Tamil Nadu Legislative Assembly ,
× RELATED டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 7...