×

அரியானாவில் டாக்டர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்: மருத்துவ சேவைகள் கடும் பாதிப்பு

சண்டிகர்: கோரிக்கைகளை வலியுறுத்தி அரியானா அரசு டாக்டர்களின் காலவரையற்ற போராட்டத்தால் அரசு மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அரியானாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள் சிறப்பு நிபுணர் இடங்களை உருவாக்குதல், ஒன்றிய அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கு இணையான பணியை உறுதி செய்யும் தொழில் முன்னேற்ற திட்டம் ,மூத்த மருத்துவ அதிகாரிகளை நேரடியாக நியமிக்கக்கூடாது என்பது உள்பட பல கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததையடுத்து நேற்று முதல் அரசுமருத்துவர்கள் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த போராட்டத்தினால் மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளின் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களை அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.

The post அரியானாவில் டாக்டர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்: மருத்துவ சேவைகள் கடும் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : CHANDIGARH ,Ariana government ,Haryana ,Union government ,indefinite strike ,Dinakaran ,
× RELATED தேர்தலில் சீட் மறுப்பு அரியானாவில்...