×

கேரட் விலை புதிய உச்சத்தை எட்டியது

 

ஊட்டி, ஜூலை 25: நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், முள்ளங்கி, முட்டைகோஸ், பீட்ரூட், வெள்ளை பூண்டு உட்பட பல்வேறு மலை காய்கறிகள் பயிரிடப்படுகிறது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கேரட் பயிரிடுவதில் விவசாயிகள் அதிகமாக ஈடுபட்டுள்ளனர். இங்கு விளைவிக்கப்படும் கேரட் வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களுக்கு கொண்டுச் சென்று விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, மேட்டுப்பாளையம், சென்னை, திருச்சி, மதுரை, பாண்டிச்சேரி, பெங்களூர் போன்ற பகுதிகளுக்கு அதிகளவு கேரட் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. மற்ற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் கேரட் மார்க்கெட்டிற்கு வந்தாலும், ஊட்டி கேரட்டிற்கு தனி மவுசு உண்டு.

இதனால், அதிகளவு தற்போது நீலகிரியில் கேரட் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு முழுக்க கேரட் உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். சாதாரணமாக ஊட்டி கேரட் கிலோ ஒன்று ரூ.35 முாதல் 50 வரை விற்னை செய்தால், விவசாயிகளுக்கு போதுமான லாபம் கிடைக்கும் அதற்கு மேல் விற்பனையானால் அதிக லாபம் கிடைக்கும். தற்போது ஊட்டி கேரட்டின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த 2 நாட்களாக புதிய உச்சத்தை எட்டியது. நேற்று கிலோ ஒன்று ஒன்று ரூ.100 முதல் 110 வரை மேட்டுப்பாளையம் மண்டியில் விற்பனையாகியுள்ளது. தொடர்ந்து கேரட்டின் விைல உச்சத்தில் உள்ள நிலையல், விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post கேரட் விலை புதிய உச்சத்தை எட்டியது appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Nilgiris district ,Dinakaran ,
× RELATED குன்னூர் அருகே குடியிருப்பு...