- பிங்கர்போஸ்ட்
- ஊட்டி
- அரசு மருத்துவக் கல்லூரி
- எமரால்டு ஹைட்ஸ் பெண்கள் கல்லூரி
- நிர்மலா பள்ளி
- தெரசா பள்ளி
- தின மலர்
ஊட்டி, செப்.3: பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நலன் கருதி பிங்கர்போஸ்ட் பகுதியில் நிழற்குடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஊட்டி அருகேயுள்ள பிங்கர்போஸ்ட் பகுதியில் அரசு மருத்துவக்கல்லூரி, எமரால்டு ஹைட்ஸ் பெண்கள் கல்லூரி, நிர்மலா பள்ளி, தெரசா பள்ளி மற்றும் தனியார் ஐ.டி.ஐ. உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளன. தலைகுந்தா, எச்.பி.எப். கூடலூர், பைக்காரா போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் இங்கு வந்து பயின்று செல்கின்றனர். பிங்கர்போஸ்ட் பகுதியில் நிழற்குடை இல்லாத நிலையில் மாணவ, மாணவிகள் சாலையோரங்களில் நிற்க வேண்டி உள்ளது.
மழைக்காலங்களில் அருகில் உள்ள நகராட்சி காம்பக்ஸ் முன் பகுதியில் தஞ்சம் அடைகின்றனர். அங்கு நிற்கும் மாணவிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலையில், அவர்கள் மழையில் நனைந்தபடியே சாலையில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், கடைகளுக்கு முன் நிற்கும் குழந்தைகளையும் வியாபாரிகள் விரட்டி விடுகின்றனர். இதனால், பள்ளி மாணவ மாணவிகள் மட்டுமின்றி பொதுமக்களும் மழைக்காலங்களில் சாலையோரங்களில் நிற்க வேண்டியுள்ளது. எனவே, பைக்காரா மற்றும் கூடலூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி நகராட்சி நிர்வாகம் பகுதியில் ஒரு நிழற்குடை அமைத்து தரவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
The post பிங்கர்போஸ்ட் பகுதியில் மாணவர்கள் நலன் கருதி நிழற்குடை அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.