×

யானை தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நிதியுதவி

ஊட்டி, செப். 7: யானை தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நீலகிரி எம்பி ஆ.ராசா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள குஞ்சப்பனை வெள்ளரி கொம்பை பகுதியில் வசித்து வந்தவர் ஜானகி அம்மாள். இவர், கடந்த மாதம் யானை தாக்கியதில் உயிரிழந்தார். அரசு சார்பில் அவருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், நீலகிரி எம்பி ஆ.ராசா சார்பில் அவரது குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி ஊட்டியில் உள்ள நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் முகாம் அலுவகத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில், யானை தாக்கிய உயிரிழந்த ஜானகி அம்மாள் குடும்பத்திற்கு எம்பி ஆ.ராசா தனது சொந்த நிதியை வழங்கி ஆறுதல் தெரிவித்தார். இதில், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன், ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

The post யானை தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நிதியுதவி appeared first on Dinakaran.

Tags : Ooty ,Nilgiris ,A. Raza ,Janaki Ammal ,Kunjapanai Vellari Kombai ,Kothagiri ,Nilgiri ,Dinakaran ,
× RELATED ஊட்டி மாவட்ட மைய நூலகத்தில் இலவச...