×

அமைச்சர்கள் வழங்கினர் குழிக்குள் தவறி விழுந்த முதியவர் பலி

 

ஈரோடு, செப். 4: ஈரோடு மாவட்டம் பாசூர் வெங்கியம்பாளையம் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் நாச்சி (75). இவரது உறவினர் ஒருவர் இறந்து விட்டதால், இறுதி சடங்கில் பங்கேற்க நாச்சியும், அவரது மகன் குமரவேலும் கடந்த 29ம் தேதி பாசூர் மயானத்திற்கு சென்றிருந்தனர். பின்னர், நாச்சி இறுதிசடங்கு முடித்து விட்டு வீட்டிற்கு திரும்ப வரும்போது, தவறி குழிக்குள் விழுந்தார்.

இதில், கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்சு மூலம் நாச்சியை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post அமைச்சர்கள் வழங்கினர் குழிக்குள் தவறி விழுந்த முதியவர் பலி appeared first on Dinakaran.

Tags : Erode ,Nachi ,Basur Onion Husk Eater Colony ,Erode District ,Kumaraveli ,Basur Mayanaa ,Dinakaran ,
× RELATED கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல்...