×

நகர திமுக சார்பில் இன்று பொது உறுப்பினர்கள் கூட்டம்

 

ஊட்டி, செப். 6: ஊட்டி நகர திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடக்கிறது. ஊட்டி நகர திமுக செயலாளர் ஜார்ஜ் கூறியிருப்பதாவது, ஊட்டி நகர திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் ஊட்டி ஒய்எம்சிஏ அரங்கில் இன்று 6ம் தேதி காலை 11 மணியளவில் நகர அவைத் தலைவர் ஜெயகோபி தலைமையில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் முப்பெரும் விழா நிகழ்ச்சிகள் நடத்துவது, வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் குறித்தும், கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. இதில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள, நகர நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், பிரதிநிதிகள், பாக முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், கட்சி முன்னோடிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு நகர செயலாளர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

The post நகர திமுக சார்பில் இன்று பொது உறுப்பினர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : city DMK ,Ooty ,Ooty city DMK ,George ,Ooty YMCA ,Dinakaran ,
× RELATED பவள விழாவை முன்னிட்டு நகர திமுக...