×

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து நீர் வெளியேற்றம் வினாடிக்கு 41,000 கனஅடியாக அதிகரிப்பு

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து நீர் வெளியேற்றம் வினாடிக்கு 41,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணைக்கு வரும் 41,000 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. 2,284 அடி உயரம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 2282.02 அடியாக உள்ளது. கபினி அணைக்கு நீர்வரத்து 14,912 கனஅடியாக உள்ள நிலையில் நீர் வெளியேற்றத்தின் அளவு 12,000 கனஅடியாக உள்ளது. இரு அணைகளில் இருந்தும் வெளியேற்றப்படும் நீரின் அளவு 49,000 கனஅடியில் இருந்து 53,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

The post கே.ஆர்.எஸ். அணையில் இருந்து நீர் வெளியேற்றம் வினாடிக்கு 41,000 கனஅடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : K. R. S. ,Kabini Dam ,Dinakaran ,
× RELATED காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும்...