×

2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் தர 4 ஆண்டு தாமதம்: திமுக கண்டனம்

டெல்லி: 2-ம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் தர 4 ஆண்டு தாமதிப்பதற்கு நாடாளுமன்றத்தில் திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. 2-ம் கட்ட திட்டத்துக்கு கடந்த 2020-ம் ஆண்டு நவம்பரில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார். மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்துக்கு விரைந்து ஒப்புதல் தர பிரதமர் நடவடிக்கை எடுக்க பிப்ரவரியில் முதல்வர் கடிதம் அனுப்பினார். 2-ம் கட்ட மெட்ரோ திட்டத்துக்கு ஒப்புதல் தர பரிசீலித்து வருவதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் பதில் அளித்தார். ஒன்றிய அமைச்சர் பதிலுக்கு மாநிலங்களவையில் திமுக எம்.பி. ராஜேஸ்குமார் ஆட்சேபம் தெரிவித்தார்.

 

The post 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் தர 4 ஆண்டு தாமதம்: திமுக கண்டனம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Delhi ,Parliament ,Chennai ,Home Minister ,Amit Shah ,Dinakaran ,
× RELATED டெல்லி அரசு பேருந்து ஊழியர்கள் இருள்...