×

குன்னூர் அருகே தாயகம் திரும்பியோர் சேவை மையம் திறப்பு

 

ஊட்டி, ஜூலை 24: குன்னூர் அருகே சேலாஸ் பகுதியில் தாயம் திரும்பிய மக்களுக்காக ரெப்கோ வங்கி சார்பில் சேவை மையம் துவக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ரெப்கோ வங்கி இயக்குநர் கிருஷ்ணகுமார் கலந்து கொண்டு சேவை மையத்தை திறந்து வைத்து, ரெப்கோ வங்கி மூலம் தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சலுகைகள் தெரிவித்தார்.

குறிப்பாக, தாயகம் திரும்பிய மக்கள் வசிக்க கூடிய இடங்களில் பகுதிகளில் ரூ.20 லட்சம் மதிப்புடைய சமுதாய கூடம், இலவச தையல் இயந்திரம், கல்வி உதவி தொகை, ஈமச்சடங்கு தொகை, 20 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தேயிலை பறிக்கும் இயந்திரம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்த சலுகைகள் பொதுமக்கள் பெற ரெப்கொ வங்கியில் ரூ.100 செலுத்தி உறுப்பினர்கள் ஆக வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ரெப்கோ வங்கி அறங்காவலர் மதிவாகனம், சந்திரமோகன், அண்ணாதுரை, சன்முகலிங்கம், ஜான் ஹீதரன், ஒலியழகன், மோகன் ராஜ் ராம்கிளி, ராஜேந்திரன், நல்லேந்திரன் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உலிக்கல் பேரூராட்சி துனைத்தலைவரும் ரெப்கோ வங்கி உறுப்பினருமான ரமேஷ்குமார் செய்திருந்தார்.

The post குன்னூர் அருகே தாயகம் திரும்பியோர் சேவை மையம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Coonoor ,Repco Bank ,Selas ,Krishnakumar ,Dinakaran ,
× RELATED குன்னூர் அருகே குடியிருப்பு...