×
Saravana Stores

கோவை புத்தகத் திருவிழாவில் சாழல் சொற்போர் நிகழ்வு

 

கோவை, ஜூலை 24: கோவை மாவட்ட நிர்வாகமும், கொடிசியாவும் இணைந்து கடந்த 19ம் தேதி முதல் கோவை கொடிசியா வளாகத்தில் புத்தகத் திருவிழாவை நடத்தி வருகிறது. இந்த புத்தகத் திருவிழாவில் இன்றைய ”இளைஞர்களின் பாதை சிகரங்களை நோக்கியா? சிரமங்களை நோக்கியா?” என்ற தலைப்பில் முனைவர் கலையமுதன் தலைமையிலான பட்டிமன்றம் நேற்று நடைபெற்றது.

இதனைதொடர்ந்து, கோவை இலக்கியச் சந்திப்பு அமைப்பின் ”ஹைக்கூ கவிதைகள் 50 ஆண்டுகள் வளர்ச்சியும் சாதனையும்” என்ற தலைப்பில் இலக்கியக் கூடுகை தாமல் கோ.சரவணன் தலைமையில் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு புகழ் இளைய தலைமுறையினர் பங்குபெற்ற ”சாழல் – சொற்போர்” நிகழ்வு நடைபெற்றது. இதில் சைவ சமயக் குரவர்களுள் ஒருவரான மாணிக்கவாசகர் சாழல் என்ற அமைப்பிலான பாடல்களை திருவாசகத்தில் இயற்றியுள்ளார்.

அதனை நவீனப்படுத்தி சொற்போர் நடைபெற்றது. மேலும், தமிழ்நாட்டில் மொழி, வரலாறு, சமயம் ஆகிய மூன்றும் காலம் கடந்தும் நம்மிடம் சரியாக வந்து சேர்ந்திருக்கிறதா? என்ற பொருண்மையில் உள்ளிட்ட விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் பாரதீய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர், கோவை புத்தகத் திருவிழா தலைவர் ரமேஷ், துணைத்தலைவர் ராஜேஷ், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். இன்று (24ம் தேதி) நடைபெறவுவுள்ள கோவை புத்தக திருவிழாவில் கொங்கு நாட்டு கல்வியாளர்கள் பற்றிய கருத்தரங்கமும், பேரூர் தமிழ் மன்றம் மற்றும் புலம் இலக்கியப் பலகை வழங்கும் கவியரங்கமும் நடைபெற இருக்கிறது.

The post கோவை புத்தகத் திருவிழாவில் சாழல் சொற்போர் நிகழ்வு appeared first on Dinakaran.

Tags : Chahal ,Coimbatore Book Festival ,Coimbatore ,Coimbatore District Administration ,Coimbatore Coimbatore ,Coimbatore Coimbatore Complex ,Dinakaran ,
× RELATED கோவை, திருப்பூர், ஈரோட்டிலிருந்து 3...