மல்லசமுத்திரம், ஜூலை 24: மல்லசமுத்திரம் அருகே கருமாபுரம் சான்றோர் குல நாடார் குருமடம் சார்பில், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற நாடார் சமுதாய மாணவ, மாணவிகளுக்கு கல்வி பரிசளிப்பு விழா அறங்காவலர் சுந்தரராஜன் தலைமையில் நடந்தது. சிவசுப்ரமண்ய பண்டித குரு சுவாமிகள் அருளாசியுரை வழங்கினார். இதில் 120 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் அமைப்பின் தலைவர் நடேசன், துணை செயலர் தியாகராஜன், தமிழாசிரியர் வேல்முருகன், நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தலைவர்கள் சக்திவேல், ராமசாமி, மேற்கு மாவட்ட செயலர் தனபால், தொழிலதிபர் கருப்பசாமி உள்பட பலர் பங்கேற்று வாழ்த்தி பேசினர்.
The post அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு appeared first on Dinakaran.