×

புதிய பென்சன் திட்ட பிரச்னைகளுக்கு தீர்வு

புதிய ஓய்வூதிய திட்டத்தில் பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் நிதி விவேகத்தை கடைப்பிடிப்பதுடன் பிரச்னைகளுக்கு தீர்வு காண உரிய வழிமுறைகள் வகுக்கப்படும் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். பாஜ ஆட்சியில் அல்லாத மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடிவெடுத்துள்ளன.அகவிலைப்படி சார்ந்த பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு அரசு பணியாளர்கள் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன.

பழைய ஓய்வூதிய திட்டத்தில்ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் கடைசியாக பெற்ற சம்பளத்தில் 50 சதவீதத்தை மாதாந்திர ஓய்வூதியமாக பெற்றனர். அகவிலைப்படி விகிதங்கள் அதிகரிக்கும் போது இந்த தொகையும் தொடர்ந்து அதிகரிக்கிறது. ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை மறு ஆய்வு செய்யவும், மாற்றங்கள் ஏதேனும் செய்ய வேண்டுமா என்பது குறித்து ஆராய நிதித்துறை செயலாளர் டி.வி.சோமநாதன் தலைமையில் ஒரு குழுவை கடந்த ஆண்டு ஒன்றிய அரசு அமைத்தது.

இந்த நிலையில், மக்களவையில் பட்ஜெட் உரையாற்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்,‘‘புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு அதற்கான பணிகளில் மிகுந்த முன்னேற்றம் கண்டுள்ளது.இதில், ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான தேசிய கவுன்சில் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை கடைப்பிடித்தது. பொதுமக்களை பாதுகாப்பதற்காக நிதி விவேகத்தை பேணுவதோடு, இந்த திட்டம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண உரிய வழிமுறைகள் வகுக்கப்படும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தில் நிறுவன உரிமையாளர்களின் செலவினங்களை பணியாளரின் சம்பளத்தில் 10-லிருந்து 14 சதவீதமாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, தனியார் துறை, பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வருமானத்தில் இருந்து சம்பளத்தில் 14 சதவீதம் வரை இந்த செலவினத்தை பிடித்தம் செய்து, புதிய வரி விதிப்பு முறையை தேர்வு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

The post புதிய பென்சன் திட்ட பிரச்னைகளுக்கு தீர்வு appeared first on Dinakaran.

Tags : Union ,Finance Minister ,Nirmala Sitharaman ,BJP ,
× RELATED சமூக வலைதளங்களில் சரியான தகவலை பகிர்ந்திடுக: நிர்மலா சீதாராமன் பேச்சு