×

கர்நாடகா அரசை கவிழ்க்க குறுக்கு வழியில் முயற்சி: முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு

பெங்களூரு: பெங்களூரு விதானசவுதாவில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் முதல்வர் கூறும்போது, வால்மீகி வளர்ச்சி வாரிய முறைகேடு புகாரில் எனக்கோ அல்லது மாநில அரசுக்கோ துளியும் சம்மந்தமில்லை. இருப்பினும் புகாரில் என்னையும், துணைமுதல்வர் டி.கே.சிவகுமாரையும் சேர்க்க வேண்டும். அதன் மூலம் ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் முயற்சியை அமலாக்க துறையை பயன்படுத்தி ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. வால்மீகி வளர்ச்சி வாரிய முறைகேடு புகாரை கர்நாடக சிஐடி போலீசார் 90 சதவீதம் விசாரணை முடித்துள்ள நிலையில், தேவையில்லாமல், அமலாக்க துறை தலையிட்டு, விசாரணையை திசை திருப்பும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதை பார்க்கும்போது, மாநில அரசை கலைப்பதற்காக மறைமுகமான சதியில் ஒன்றிய அரசு குறுக்கு வழியில் இறங்கி இருப்பது தெரியவருகிறது. இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நிகழ்வாக உள்ளது. என்றார். இதற்கிடையே அமலாக்க துறையை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதுடன் மாநில அரசுக்கு எதிராக ஏவிவிட்டுள்ளதாக குற்றம்சாட்டி முதல்வர் சித்தராமையா தலைமையில் பெங்களூருவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினர்.

The post கர்நாடகா அரசை கவிழ்க்க குறுக்கு வழியில் முயற்சி: முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Karnataka ,CM ,Siddaramaiah ,BENGALURU ,Chief Minister ,Vidhana Soudha ,government ,Valmiki Development Board ,Deputy Principal ,DK Sivakumar ,Karnataka government ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவில் மஜத ஆதரவோடு காங்கிரஸ்...