×

பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் 438 காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் நியமிக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் 320 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் 210 இடைநிலை ஆசிரியர்கள், 179 பட்டதாரி ஆசிரியர்கள், 49 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. இதையடுத்து, 300 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் 6 ஆண்டுகளாக பணியாற்றி வந்தனர். அவர்கள் சில வாரங்களுக்கு முன் நீக்கப்பட்டிருப்பது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் பணியாற்றி வந்த 300 தற்காலிக ஆசிரியர்களும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்கள். அவர்கள் சிறப்பாக பணியாற்றி பள்ளிகளின் கல்வி தரத்தையும், தேர்ச்சி விகிதத்தையும் அதிகரித்து வந்தனர். இத்தகைய சூழலில் அவர்கள் திடீரென பணி நீக்கப்பட்டதற்காக பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் தெரிவித்துள்ள காரணம் ஏற்க முடியாதது. எனவே, பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் காலியாக உள்ள 438 ஆசிரியர் பணியிடங்களுக்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை தற்காலிக ஆசிரியர்கள் 300 பேரும் பணியில் தொடர அனுமதிக்க வேண்டும்.

The post பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் 438 காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் நியமிக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ramadoss ,Tamil Nadu govt ,CHENNAI ,PAMAK ,Tamil Nadu Adi Dravidar and Tribal Welfare Department ,Tamilnadu government ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டு பள்ளிகளில் கல்விசாராத...