×

இலங்கை அதிபர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த தமிழர் கட்சிகள் ஒப்பந்தம்

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு தமிழ் கட்சிகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இலங்கையின் அதிபராக உள்ள ரணில் விக்ரமசிங்கேயின் பதவி காலம் வரும் நவம்பரில் நிறைவடைவதால் செப்டம்பர் 17ம் தேதியில் இருந்து அக்டோபர் 16ம் தேதிக்குள் அதிபர் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில், ரணில் விக்ரமசிங்கே , எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியின் தலைவர் அனுரா குமார திசநாயகே ஆகியோர் போட்டியிட உள்ளனர்.

இந்நிலையில்,இலங்கையில் உள்ள தமிழர் கட்சிகள் ஒன்றிணைந்து அதிபர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த கூட்டத்தில், தமிழ் ஈழ விடுதலை இயக்கம்(டெலோ),தமிழீழ மக்கள் விடுதலை கழகம்(பிளாட்), தமிழர் முற்போக்கு கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(ஈபிஆர்எல்எப்), தமிழர் தேசிய மக்கள் முன்னணி(டிஎன்பிஎப்)ஆகிய கட்சிகளும், தமிழ் மக்கள் காங்கிரஸ் சங்கம் உள்ளிட்ட சில சமூக அமைப்புகள் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

The post இலங்கை அதிபர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த தமிழர் கட்சிகள் ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Colombo ,Lankan ,election ,Ranil Wickremesinghe ,
× RELATED இந்தியப் பெருங்கடல் பகுதியில்...