×

உருளைக்கிழங்கு விலை உயர்வு நீலகிரி விவசாயிகள் மகிழ்ச்சி

 

ஊட்டி, ஜூலை 20: நீலகிரி மாவட்டத்தில் மலை காய்கறிகளுக்கு அடுத்தப்படியாக, உருளைக்கிழங்கு மற்றும் கேரட் போன்ற காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் அதிகளவில் உருளைக்கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் உருளைக்கிழங்கிற்கு சுவை அதிகம் என்பதால், வெளி மாநிலம், வெளி நாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதமட்டுமின்றி மேட்டுப்பாளையத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு அங்குள்ள தனியார் மண்டிகளில் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த வாரம் வரை கிலோ ஒன்றுக்கு ரூ.80 முதல் 100 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த உருளைக்கிழங்கிற்கு தற்போது ரூ.120 வரை விலை கிடைத்து வருகிறது. மேட்டுப்பாளையம் கொண்டுச் செல்ல லாரி வாடகை, தூக்கு மற்றும் இறக்கு கூலி போன்றவைகள் இல்லாமல் ஊட்டியிலேயே தாங்கள் உற்பத்தி செய்த உருளைக்கிழங்கினை விற்பனை செய்து வருகின்றனர். தற்ேபாது மழை பெய்து வருவதால், மேலும் உருளைக்கிழங்கிற்கு விலை கிடைக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post உருளைக்கிழங்கு விலை உயர்வு நீலகிரி விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,
× RELATED பொதுமக்களின் பயன்பாட்டிற்காக...