×

வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றது போல புதிய குற்றவியல் சட்டங்களையும் பாஜ திரும்பப் பெற வேண்டும்: விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

புழல்: வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றதுபோல புதிய குற்றவியல் சட்டங்களையும் பாஜ திரும்பப் பெற வேண்டும், என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். செங்குன்றம் அடுத்த அலமாதியில் விடுதலை சிறுத்தை கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: எளிய மக்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மின் கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம். குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஜூலை 29ம் தேதி தமிழ்நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் புதுடில்லி ஜந்தர் மந்தரில் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தை கட்சியின் சார்பில் ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்திய ஒன்றிய அரசு குற்றவியல் சட்டங்களை இன்னொரு பொடா சட்டம் என்ற வகையிலே மாற்றி அமைத்து வைத்தது அதிர்ச்சி அளிக்கிறது. அதனை திரும்ப பெற வேண்டும். எப்படி வேளாண் சட்டங்களை பாஜக அரசு திரும்ப பெற்றதோ, அதே போல இந்த புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு பின்னணியில் யார் இருந்தாலும் ஒருவரையும் விடாமல் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்பதுதான் விடுதலை சிறுத்தைகளின் கோரிக்கை. அதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். விரைவில் அனைத்து உண்மை குற்றவாளிகள், திரை மறைவில் திட்டமிட்டவர்கள், ஏவியவர்கள் ஆகிய அனைத்து உண்மை குற்றவாளிகளும் கைது செய்யப்படுவார்கள் என நம்புகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

 

The post வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றது போல புதிய குற்றவியல் சட்டங்களையும் பாஜ திரும்பப் பெற வேண்டும்: விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : BJP ,Vishik ,Thirumavalavan ,Puzhal ,Vichitumi Siruthaigal Party ,Vimithya Tiger Party ,Alamati ,Senggunram.… ,VC ,
× RELATED அம்பேத்கர் விஸ்வரூபம் எடுக்கிறார்;...