×

அமெரிக்காவுக்கான புதிய தூதர் வினய் குவாத்ரா

புதுடெல்லி: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக முன்னாள் வெளியுறவுச் செயலர் வினய் குவாத்ரா நியமிக்கப்பட்டார். அமெரிக்காவுக்கான இந்திய தூதராக பணியாற்றி வந்த தரன்ஜித்சந்து கடந்த ஜனவரி மாதம் ஓய்வு பெற்றதில் இருந்து புதிய தூதர் நியமனம் செய்யப்படவில்லை. இந்தநிலையில் அமெரிக்காவுக்கான புதிய இந்திய தூதராக வினய் குவாத்ரா நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு ெவளியிட்டுள்ளது.

கடந்த 2022 முதல் வெளியுறவு செயலாளராக பணியாற்றிய குவாத்ரா கடந்த 14ம் தேதி அந்த பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவர், 1988ல் இந்திய வெளியுறவுச் சேவையில் இணைந்தார். முதல் பணியாக ஜெனிவாவில் உள்ள இந்தியாவின் நிரந்தர தூதரகத்தில் பணியாற்றினார். அதை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் அவர் பணிபுரிந்தார்.

 

The post அமெரிக்காவுக்கான புதிய தூதர் வினய் குவாத்ரா appeared first on Dinakaran.

Tags : Vinay Kwatra ,US ,New Delhi ,Former Foreign Secretary ,India ,Tharanjit Chandu ,America ,
× RELATED செபி தலைவருக்கு எதிராக புகார்கள்...