×

ரயில்வே துறையில் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள திட்டங்களை முடிக்க நடவடிக்கை: ஒன்றிய இணை அமைச்சர் வி.சோமண்ணா தகவல்

ஹாசன்: ரயில்வே துறையில் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திட்டங்களை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ரயில்வே துறை ஒன்றிய இணை அமைச்சர் வி.சோமண்ணா தெரிவித்தார். ஹாசன் மாவட்டம் பேலூர் டவுனில் வீரசைவ கல்யாண மண்டபத்தில் குருபூர்ணிமா மற்றும் குரு வந்தனம் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட ரயில்வே இணை அமைச்சர் வி.சோமண்ணா பேசியதாவது, கடந்த 10 ஆண்டுகளாக நாட்டின் பல ரயில்வே திட்டங்கள் முழுமையடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதுபோன்ற திட்டங்களை முடிக்க பிரதமர் நரேந்திரமோடி மற்றும் ரயில்வே அமைச்சருக்கு கூறியுள்ளதால், இப்போது எந்த திட்டங்களை எடுத்து கொள்ளலாம் என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.11 ஆயிரம் கோடி செலவில் பல ரயில்வே திட்டங்கள் தொடங்கப்பட உள்ளது. இதில், ஹாசன்-பேலூர் ரயில்வே வழித்தடம் 1994ம் ஆண்டில் இருந்து கிடப்பில் போடப்பட்டுள்ளது. சுமார் 11 ஆயிரம் லைன்கள் அமைக்க திட்டமிட்டு ராயதுர்கா-தும்கூரு, தும்கூரு-சித்ரதுர்கா-தாவணகெரே வழித்தடங்களும் தொடங்கப்பட உள்ளது என்றார்.

The post ரயில்வே துறையில் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள திட்டங்களை முடிக்க நடவடிக்கை: ஒன்றிய இணை அமைச்சர் வி.சோமண்ணா தகவல் appeared first on Dinakaran.

Tags : Union Minister of State V. Somanna ,Hassan ,Union Minister of State for Railways ,V. Somanna ,Gurupurnima ,Guru Vandanam ,Veerashaiva Kalyana Mandapam ,Belur Town, Hassan District ,Dinakaran ,
× RELATED மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி