×

ஒடிசா ஆளுநரின் மகனால் தாக்கப்பட்ட அதிகாரி இடமாற்றம்

புவனேஷ்வர்: ஒடிசா ஆளுநர் ரகுபர்தாசின் மகன் லலித் குமார். ஆளுநர் மாளிகையில் உதவி பிரிவு அதிகாரியாக பணியாற்றி வந்தவர் பைகுந்த பிரதான். கடந்த 7ம் தேதி பூரி ரயில் நிலையத்தில் இருந்து தன்னை அழைத்து செல்ல கார் அனுப்பும்படி ஆளுநர் ரகுபர்தாசின் மகன் லலித் குமார் பைகுந்த பிரதானிடம் கேட்டுள்ளார். ஆனால் பிரதான் அனுப்பிய கார் சொகுசாக இல்லை என்று கூறி லலித் குமார் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆளுநர் மாளிகை அதிகாரி பைகுந்த பிரதானை தரக்குறைவாக பேசியதுடன், கடுமையாக தாக்கி உள்ளார். இதுகுறித்து ஆளுநரின் முதன்மை செயலாளரிடம் கடந்த 10ம் தேதி பைகுந்த பிரதான் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஆளுநர் மாளிகை எந்த அறிக்கையும் வௌியிடவில்லை. இந்நிலையில் ஆளுநரின் மகன் மீது புகார் கூறிய அதிகாரி பைகுந்த பிரதான் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து ஒடிசா அரசு வௌியிட்டுள்ள அறிவிப்பில், “ஒடிசா ஆளுநர் மாளிகை அதிகாரி பைகுந்த பிரதான் உள்துறை அமைச்சகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்” என தெரிவித்துள்ளது.

The post ஒடிசா ஆளுநரின் மகனால் தாக்கப்பட்ட அதிகாரி இடமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Odisha ,Governor ,Bhubaneswar ,Lalit Kumar ,Raghubardas ,Bhaikunta Pradhan ,Governor's House ,Raghubardasin ,Puri ,Dinakaran ,
× RELATED ஒடிசாவில் 2 பேருக்கு பறவைக்காய்ச்சல்?: பரிசோதனை முடிவுக்கு காத்திருப்பு