×

பாதிக்கப்பட்ட வேட்பாளர்கள் இவிஎம்மை சரிபார்க்கும் நடைமுறைகள் வெளியீடு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், மின்னணு வாக்கு இயந்திரங்களை சோதனையிட 11 வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் மனுதாக்கல் செய்திருந்தனர். இவர்கள் மின்னணு வாக்கு இயந்திரங்களில் முறைகேடு நடந்திருக்கிறதா என்பதை பரிசோதிப்பதற்கான நடைமுறைகளை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. அதன்படி, சம்பந்தப்பட்ட தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு இயந்திரத்தின் நினைவகம் அல்லது மைக்ரோ கன்ட்ரோலர் மற்றும் விவிபாட் இயந்திரத்தில் 5 சதவீதத்தை வேட்பாளர் அல்லது முகவர்களின் முன்னிலையில் இயந்திர தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலர்கள் மூலம் பரிசோதனை செய்யலாம். இதற்கு பல்வேறு விருப்பத் தேர்வுகளை தேர்தல் ஆணையம் வழங்கியிருக்கிறது. குறிப்பாக, சட்டப்பேரவை தொகுதியில் எந்தவொரு குறிப்பிட்ட வாக்குச்சாவடி மையத்தில் பயன்படுத்திய வாக்கு இயந்திரத்தை சோதனையிட மனுதாரர் தேர்வு செய்யலாம். மாதிரி வாக்குப்பதிவு நடத்தியும், மாதிரி விவிபேட் சரிபார்ப்பு நடத்தியும் சோதனை செய்ய முடியும்.

The post பாதிக்கப்பட்ட வேட்பாளர்கள் இவிஎம்மை சரிபார்க்கும் நடைமுறைகள் வெளியீடு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Election Commission ,New Delhi ,Lok Sabha ,Assembly ,Dinakaran ,
× RELATED விஜய் கட்சிக்கு தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகாரம்