×

புடின் உடனான நட்பை பயன்படுத்தி உக்ரைன் போரை நிறுத்த இந்தியா உதவ வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்

மில்வாக்கி: ரஷ்யா உடனான நீண்டகால உறவை பயன்படுத்தி, உக்ரைனுக்கு எதிரான சட்டவிரோத போரை நிறுத்துமாறு அதிபர் புடினிடம் இந்தியா வலியுறுத்த வேண்டுமென அமெரிக்கா கூறி உள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் அளித்த பேட்டியில், ‘‘ரஷ்யாவுடன் இந்தியா நீண்டகால உறவைக் கொண்டுள்ளது. இது அனைவரும் நன்கு அறிந்ததே. எனவே இந்த உறவை பயன்படுத்தி, உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் சட்டவிரோத போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென அதிபர் புடினிடம் இந்தியா வலியுறுத்த வேண்டுமென்பதை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.

போரை முடிவுக்கு கொண்டு வந்து, அமைதியை மீட்க வலியுறுத்துகிறோம். எங்களின் நெருங்கிய கூட்டாளியாக இருக்கும் இந்தியாவிடம் இந்த விஷயத்தை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம்’’ என்றார். சமீபத்தில் பிரதமர் மோடி ரஷ்யா பயணம் மேற்கொண்டு திரும்பிய நிலையில், அமெரிக்கா இத்தகைய கருத்தை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

The post புடின் உடனான நட்பை பயன்படுத்தி உக்ரைன் போரை நிறுத்த இந்தியா உதவ வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : India ,Putin ,Ukraine ,US ,MILWAUKEE ,United States ,Russia ,President Putin ,US State Department ,Matthew Miller ,Dinakaran ,
× RELATED உக்ரைன் பயணம் குறித்து ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் மோடி பேச்சு