×

2 பேருந்தில் அடித்துசெல்லப்பட்ட 54 பேர் நேபாள ஆற்றில் இருந்து இந்தியரின் சடலம் மீட்பு

காத்மண்ட்: நேபாளத்தில் நிலச்சரிவினால் 54 பயணிகளுடன் ஆற்றில் இரண்டு பேருந்துகள் அடித்து செல்லப்பட்ட நிலையில் ஒரே ஒரு இந்தியரின் சடலம் மட்டும் மீட்கப்பட்டுள்ளது.நேபாளத்தில் தொடர் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு சாலையில் சென்ற இரண்டு பேருந்துகள் ஆற்றில் கவிழ்ந்து அடித்து செல்லப்பட்டன. இந்த பேருந்துகளில் 7 இந்தியர்கள் உட்பட மொத்தம் 54 பயணிகள் இருந்தனர்.

திரிசூலி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பேருந்தை .சுமார் 500 பேர் இந்த தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு நிறுத்தப்பட்ட தேடுதல் பணி நேற்று காலை 8 மணிக்கு மீண்டும் தொடங்கியது. இந்நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் இருந்து சுமார் 50கி.மீ- தொலைவில் சேற்றில் சிக்கியிருந்த சடலத்தை மீட்பு குழுவினர் மீட்டனர். அவர் அணிந்திருந்த அடையாள அட்டை மூலமாக அவர் இந்தியர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மீதமுள்ள 50 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. இவர்கள் உயிர்பிழைத்து இருப்பதற்கான வாய்ப்புக்கள் மிக குறைவு என கருதப்படுகின்றது.

 

The post 2 பேருந்தில் அடித்துசெல்லப்பட்ட 54 பேர் நேபாள ஆற்றில் இருந்து இந்தியரின் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Nepal river ,Kathmandu ,Nepal ,Dinakaran ,
× RELATED நேபாள பஸ் விபத்தில் பலியான 25 இந்தியர்களின் உடல் விமானம் மூலம் வந்தது