×

சட்ட மேலவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த 8 காங். எம்எல்ஏக்கள்: மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு

மும்பை: மகாராஷ்டிரா சட்ட மேலவையின் 11 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரசைச் சேர்ந்த 8 எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிரா மாநில சட்ட மேலவையில் காலியாகவுள்ள 11 இடங்களுக்கு 12 பேர் போட்டியிட்டனர். ஆளும் மகாயுதி கூட்டணியில், பாஜ சார்பில் 5 பேரும், சிவசேனா, அஜித்பவார் கட்சி சார்பில் தலா 2 பேரும் களமிறக்கப்பட்டனர். நேற்று முன் தினம் நடந்த தேர்தலில் மகாயுதி கூட்டணியின் 9 வேட்பாளர்களும், எதிர்க்கட்சிகள் கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரதன்ய சதவ், உத்தவ் கட்சி வேட்பாளர் மிலிந்த் தாக்கரே ஆகியோர் வெற்றி பெற்றனர்.

ஆனால், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கட்சி வேட்பாளர் ஜெயந்த் பாட்டீல் தோல்வியடைந்தார். இதற்கு காரணம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பேரவையில் காங்கிரசுக்கு 37 எம்எல்ஏக்களும், உத்தவ் சிவசேனாவுக்கு 15 எம்எல்ஏக்களும் உள்ளனர். ஒரு மேலவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க குறைந்தபட்சம் 23 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் என்ற நிலையில், கிட்டத்தட்ட 7 முதல் 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறி ஓட்டு போட்டதாக சட்ட மேலவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The post சட்ட மேலவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த 8 காங். எம்எல்ஏக்கள்: மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Congress ,Legislative Council ,Maharashtra ,Mumbai ,Maharashtra Legislative Council ,Maharashtra Legislative Assembly ,Council ,
× RELATED கார்கேவை சந்தித்துவிட்டு காங்கிரஸில்...