×

விராட் கோலிக்கு சொந்தமான பார் மீது வழக்குப்பதிவு: நள்ளிரவு 1.30 மணி வரை அதிக சத்தத்துடன் இயக்கப்பட்டதாக புகார்

பெங்களூர்: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான பார் மீது பெங்களூரு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி மதுபானக் கூடங்களை திறந்து வைத்துள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து விராட் கோலியின் பார் உள்பட 4 பார்கள் மீது சனிக்கிழமை நள்ளிரவு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விராட் கோலிக்கு சொந்தமான நிறுவனம் ஒன்8 கம்யூன் என்ற மதுபானக் கூடம். இந்த நிறுவனத்துக்கு தில்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் கிளைகள் உள்ளன.

கர்நாடக மாநிலம் பெங்களூரு எம்ஜி சாலையில் சின்னசாமி கிரிக்கெட் மைதானம் அருகே ஒன்8 கம்யூன் மதுபானக் கூடத்தின் கிளை உள்ளது. மேலும், பல நிறுவனங்களின் மதுபானக் கூடங்களும் இந்த சாலையில் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு எம்ஜி சாலையில் உள்ள மதுபானக் கூடங்களில் அதிக சத்தத்துடன் இந்த பப்களில் பாடல்கள் போடப்படுவதால் தங்களால் நிம்மதியாகத் தூங்கக் கூட முடிவதில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

அதன்படி சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியம் அருகே உள்ள ஒன்8 கம்யூன் பப், விதிகளை மீறி அதிக நேரம் செயல்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “இரவில் அதிக சத்தத்தில் பாடல்கள் போடப்படுவதாகவும் இது தொந்தரவாக இருப்பதாகப் பலரும் புகாரளித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளோம். விசாரணை நடக்கும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

The post விராட் கோலிக்கு சொந்தமான பார் மீது வழக்குப்பதிவு: நள்ளிரவு 1.30 மணி வரை அதிக சத்தத்துடன் இயக்கப்பட்டதாக புகார் appeared first on Dinakaran.

Tags : Virat Kohli ,Bangalore ,Dinakaran ,
× RELATED ஆல்ரவுண்டர் ஐசிசி தலைவர் ஆகிவிட்டார் ஜெய்ஷாவை கிண்டலடித்த பிரகாஷ் ராஜ்