×

ம.பி பாஜ அரசில் 2 முறை அமைச்சராக பதவியேற்ற காங்கிரஸ் எம்எல்ஏ: வார்த்தைகளை தவறாக வாசித்ததால் குளறுபடி

போபால்: மத்தியப்பிரதேச முதல்வர் மோகன் யாதவ் பதவியேற்று சுமார் 7 மாதங்கள் ஆன நிலையில் அவரது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றராம்நிவாஸ் ராவத்துக்கு கேபினெட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள விஜய்பூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் 6 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர். மக்களவை தேர்தலுக்கு முன்பாக இவர் பாஜவில் இணைந்தார். ஆனால் காங்கிரஸ் எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்யவில்லை. இந்நிலையில் தான் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ராஜ்பவனில் உள்ள சாந்திபவனில் நேற்று பதவியேற்பு விழா நடைபெற்றது. பதவிபிரமாணத்தின்போது ராம்நிவாஸ் கேபினெட் அமைச்சர் என்பதற்கு பதிலாக இணை அமைச்சர் என்று கூறி பதவியேற்றுக்கொண்டார். இது குறித்து ஊடகங்கள் மூலம் தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து உடனடியாக தர்பார் ஹாலில் மீண்டும் ராம்நிவாஸ் பதவி பிரமாண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முதல்வர் மோகன் யாதவ் மற்றும் அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டனர். இரண்டாவது முறையாக ராம்நிவாஸ் பதவியேற்றார். அப்போது கேபினெட் அமைச்சர் என்று கூறி அவர் பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் மங்குபாய் படேல் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

The post ம.பி பாஜ அரசில் 2 முறை அமைச்சராக பதவியேற்ற காங்கிரஸ் எம்எல்ஏ: வார்த்தைகளை தவறாக வாசித்ததால் குளறுபடி appeared first on Dinakaran.

Tags : Congress MLA ,MP-Baj government ,Bhopal ,Madhya Pradesh ,Chief Minister ,Mohan Yadav ,Ram Niwas Rawat ,Congress ,MLA ,Sheopur ,BJP government ,Dinakaran ,
× RELATED தேசிய ஹஜ் கமிட்டி உறுப்பினராக வேளச்சேரி எம்எல்ஏ அசன் மவுலானா தேர்வு