×

கேரளாவின் வயநாடு பகுதியில் மாற்றுமுறை மருத்துவத்திற்கு சென்றதால் 3 வயது சிறுவன் உயிரிழப்பு: தந்தை, சிகிச்சையளித்த நபர் கைது

வயநாடு : கேரளாவின் வயநாடு பகுதியில் வெந்நீர் வாளியில் விழுந்து காயமடைந்த 3 வயது சிறுவன், உரிய சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்த நிலையில் தந்தை, சிகிச்சையளித்த நபர் கைது செய்யப்பட்டனர். ஜூன் 9ம் தேதி வெந்நீர் நிரம்பிய வாளியில் விழுந்து முகமது அசன்( 3) தீக்காயம் அடைந்தார். குழந்தையை முதலில் மானந்தவாடி மருத்துவக் கல்லூரியில் சேர்த்தனர். தீக்காயம் கடுமையாக இருந்ததால், அங்கிருந்து கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.

ஆனால் பெற்றோர் குழந்தையை மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லவில்லை. மாறாக, உள்ளூர் மருத்துவரிடம் அனுப்பி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், ஜூன் 18ஆம் தேதி கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் ஜூன் 20ஆம் தேதி குழந்தை இறந்தது. இந்த சம்பவத்தில், பனமரம் அஞ்சுகுன்றத்தைச் சேர்ந்த வைசியம்பத் அல்தாப், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கம்மன ஐகரக்குடி ஜார்ஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

The post கேரளாவின் வயநாடு பகுதியில் மாற்றுமுறை மருத்துவத்திற்கு சென்றதால் 3 வயது சிறுவன் உயிரிழப்பு: தந்தை, சிகிச்சையளித்த நபர் கைது appeared first on Dinakaran.

Tags : Wayanadu region of ,Kerala ,Wayanad ,Mohammed ,Wayanadu region of Kerala ,Dinakaran ,
× RELATED முல்லைப்பெரியாறு அணையில் தமிழக...