×

கூடங்குளம்: மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்

நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. கடந்த மே 5-ல் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது பராமரிப்பு பணி முடிந்த நிலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, இன்று மாலைக்குள் 1,000 மெகாவாட்டை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே முதல் அணு உலையில் 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

The post கூடங்குளம்: மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : KOODANKULAM ,Nella ,Kudankulam nuclear power plant ,Kudankulam ,Dinakaran ,
× RELATED பேரிகார்டில் பைக் மோதி கூடங்குளம் விஞ்ஞானி பலி