ஊத்தங்கரை, ஜூலை 7: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனை வளாகத்தில் தீயணைப்பு துறை சார்பில், நிலைய அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டால் அருகே இருக்கும் நபர்கள் உடனடியாக மீட்பு பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், நோயாளிகளை காப்பாற்றுவது, கட்டிடத்தின் மேல்தளத்தில் சிக்குபவர்களை மீட்பது உள்ளிட்ட செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், மாடியில் இருந்து காயம்பட்டவர்களை மீட்டு கீழே கொண்டு வருவதை தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்தனர். தீயணைப்பு கருவிகளை இயக்கும் முறைகள் குறித்தும், செயற்கையாக தீயை உருவாக்கி, அதனை மருத்துவர்கள், செவிலியர்கள் மூலம் அணைக்க வைப்பது போன்ற பயிற்சியும் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஊத்தங்கரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
The post தீ தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை appeared first on Dinakaran.