×
Saravana Stores

மாவட்ட திமுக வக்கீல் அணியினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, ஜூலை 6: கிருஷ்ணகிரியில் திமுக வக்கீல் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு அமல்படுத்தி 3 குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் முன், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வெங்கடேஷ்ராஜா தலைமை வகித்தார். ஆர்பாட்டத்தின் போது, 3 குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில், வக்கீல்கள் தேவராஜன், பிரபாகரன், புகழேந்தி, சுரேஷ், மதியழகன், அசோகன், வஜ்ரவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மாவட்ட திமுக வக்கீல் அணியினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Krishnagiri ,district ,Krishnagiri East district DMK ,Krishnagiri district court ,Dinakaran ,
× RELATED ஓசூரில் தனியார் பள்ளி மாணவியை...