×

புதிய குற்றவியல் திருத்த சட்டத்தில் இந்தி திணிப்பு; அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்

சென்னை: புதிய குற்றவியல் திருத்த சட்டத்தின் மூலம் இந்தி திணிக்கப்படுவதை கண்டித்து அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய பாஜ அரசால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு, 1.7.2024 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்களில் உள்ள குளறுபடிகளை நீக்கக் கோருவதுடன், மேற்படி 3 புதிய சட்டங்களுக்கு சமஸ்கிருதம் கலந்த இந்தியில் பெயர் வைத்து அப்பட்டமான இந்தி திணிப்பு செய்துள்ளதை கண்டிக்கிறோம். அந்த சட்டங்களுக்கு மீண்டும் ஆங்கிலத்தில் பெயர் சூட்டக் கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவின் சார்பில் இன்று பகல் 12 மணிக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்பாக, அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை தலைமையில் அறவழியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

The post புதிய குற்றவியல் திருத்த சட்டத்தில் இந்தி திணிப்பு; அதிமுக இன்று ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Adimuga ,Chennai ,Hindi ,Secretary General ,Edapadi Palanisami ,Parliament ,Government of Madhya Baja ,Dinakaran ,
× RELATED அதிமுக நிர்வாகி மகன் படுகொலை